பாட்டில் மூடியில் சிறுவனின் உதடுகள் சிக்கி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவதியுற்ற சம்பவம்

மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (ஜேபிபிஎம்) உறுப்பினர்களால் மீட்கப்படுவதற்கு முன்பு  பாட்டில் மூடியில் சிறுவனின் உதடுகள் சிக்கி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவதிப்பட்டான்.

ஏழு வயது சிறுவன் ஆரம்பத்தில் இங்குள்ள ஜாலான் ஜெலடெக்கில் உள்ள ஒரு கிளினிக்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டான். அதற்கு முன்பு கிளினிக் JBPM ஐ உதவிக்கு தொடர்பு கொண்டது.

ஆபரேஷன்ஸ் கமாண்டர் முகமட் ருஸ்டி இப்ராஹிம் கூறுகையில், காலை 10 மணிக்கு சம்பவம் குறித்து  தனது தரப்பினருக்கு அழைப்பு வந்தது. அவரது கூற்றுப்படி,  தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் இருந்து ஆறு உறுப்பினர்களின் பலம் கொண்ட ஒரு இயந்திரம் கிளினிக்கிற்கு விரைந்தது.

குழந்தையின் உதடுகள் ஒரு பாட்டில் மூடியில் ஒட்டிக்கொண்டு வீங்கியிருப்பதைக் கண்டோம். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘குழந்தையின் உதடுகளில் இருந்த பாட்டில் மூடியை பாதுகாப்பாக அகற்ற சிறப்பு ‘மினி கிரைண்டர்’ கருவியைப் பயன்படுத்தினோம். இந்த வழக்கு மேல் நடவடிக்கைக்காக மருத்துவக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here