திரெங்கானு மற்றும் கிளாந்தான் ஆகிய மாநிலங்களில் தொடர் மழைக்கு வாய்ப்பு

கோலாலம்பூர்:

திரெங்கானு மற்றும் கிளாந்தான் மாநிலங்களில் தொடர் மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று நண்பகல் 12.25 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில், கிளாந்தானில் தும்பாட், பாசீர் மாஸ், கோத்தா பாரு, ஜெலி, தானாஹ் மேரா, பச்சோக், மாச்சாங், பாசீர் பூத்தே மற்றும் கோலக் கிராய் ஆகிய பகுதிகள் இந்த வானிலையால் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரெங்கானுவில், பெசூட், செத்தியூ, கோலா நெராஸ் மற்றும் கோலா திரெங்கானு ஆகிய பகுதிகளும் இந்த தொடர் மழையை பெறும் என்றும் அவ்வறிக்கையில் அது தெரிவித்துள்ளது.

மேலும், ஜனவரி 9 முதல் 11 வரை மேற்குக் கடற்கரை (ரானாவ் மற்றும் கோத்தா பெலூட்), சண்டகான் (தெலுபிட், கினாபடங்கான், பெலூரான் மற்றும் சண்டகான்) மற்றும் கூடாட் ஆகியவற்றை உள்ளடக்கிய சபாவின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here