நீதிபதிகளின் ஓய்வுபெறும் தற்போதைய 65 வயதிற்குப் பதிலாக, அதனை 70 வயதாக உயர்த்துமாறு மலேசிய வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் இன்று முன்மொழிந்தார்.
உலகெங்கிலும் உள்ள பல நீதிபதிகளின் ஓய்வூதிய வயது எல்லை 70 ஆக நிர்ணயித்துள்ளதாகவும் சில நாடுகளில் அந்த வயது எல்லை 75 முதல் 80 வயது வரையும் கூட வழக்கத்தில் உள்ளது என்று, கரேன் சீ யீ லின் கூறினார்.
“இந்த முக்கியமான சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசியலமைப்புத் திருத்தங்களைச் செய்யுமாறு, அரசாங்கத்தை மலேசிய பார் வலியுறுத்துகிறது,” என்று 2023 ஆம் ஆண்டின் சட்ட ஆண்டு தொடக்க விழாவில் உரையாற்றும்போது சேஹ் கூறினார்.
முன்னதாக, தலைமை நீதிபதி துன் துங்கு மைமுன் துவான் மாட், அதே நிகழ்வில் தனது உரையை ஆற்றியபோது, 2025 இல் தான் ஓய்வு பெற உள்ளதாக சுட்டிக்காட்டினார்.









