நேற்றிரவு தாய்லந்தில் நடைபெற்ற AFF கிண்ணப் போட்டியின் இரண்டாம் கட்ட ஆட்டத்தின்போது, மலேசிய அணி எதிர்பாராத தோல்வியை தழுவியதைத் தொடர்ந்து, அத் தோல்விக்கு தாமே முழு பொறுப்பேற்பதாக ஹரிமாவ் மலாயா அணியின் தலைமை பயிற்றுனர் கின் பான் கோன் கூறியுள்ளார்.
ஹரிமாவ் மலாயா அணியை வெற்றிபெற வைக்க தவறியதற்காக, தான் அனைத்து மலேசியர்களிடமும் அவர் மன்னிப்பு க் கேட்டுக்கொண்டார்.
அவர்கள் என் அறிவுறுத்தலைப் பின்பற்றினார்கள், அவர்கள் இறுதிவரை போராடினார்கள். அதனால் எந்தவொரு பிரச்சனை, இலக்கு, ஆட்டக்காரர்களின் வரிசை, உத்திகள் குறித்த சந்தேகம் இருந்தால் இது எனது பிரச்சனையாகும். விளையாட்டாளர்களால் அல்ல”, என்றார் அவர்
இத்தோல்விக்காக, விளையாட்டாளர்களைக் குறை கூற வேண்டாம் என்று, தென் கொரியாவைச் சேர்ந்த அவர் அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.