கோவிட்-19 தொற்று சம்பவங்கள் இன்னும் கட்டுப்பாட்டில் உள்ளன; எல்லைகளை மூட வேண்டிய அவசியமில்லை – டாக்டர் ஜாலிஹா

நாட்டில் கோவிட் -19 தொற்று சம்பவங்களின் நிலைமை இன்னும் கட்டுப்பாட்டில் உள்ளது, எனவே அரசாங்கம் எல்லைகளை மூட வேண்டிய அவசியமில்லை என்று சுகாதார அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா தெரிவித்தார்.

இருப்பினும், தொற்றுநோயைக் கட்டுப்படுத்த நாட்டின் சோதனைச் சாவடிகளில் சில அணுகுமுறைகளைச் செயல்படுத்துவதன் மூலம் அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, ஜனவரி 8 முதல் சீனாவிலிருந்து சுமார் 7,000 சுற்றுலாப் பயணிகளின் நாட்டிற்கு வருகை தந்திருந்தாலும், நாட்டின் எந்தவொரு அனைத்துலக நுழைவுவாயிகளிலும் கோவிட்- 19 நோய்த்தொற்றுகள் அல்லது அறிகுறிகள் எதுவும் கண்டறியப்படவில்லை.

மேலும் “கோவிட்-19 நிலைமை கட்டுக்குள் உள்ளது,என்றும் மக்களின் விழிப்புணர்வு இன்னும் உயர் மட்டத்தில் உள்ளது, இதுபோன்ற சூழ்நிலைகள் காரணமாக எல்லைகளை மூடுவதற்கு எங்களுக்கு அவசியமில்லை ,” என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here