2.6 மில்லியனுக்கும் அதிகமான இளம் பருவத்தினர் கோவிட்-19 தடுப்பூசியின் இரு அளவையும் போட்டுக் கொண்டுள்ளனர்

கோலாலம்பூர், நவம்பர் 27 :

நேற்றைய நிலவரப்படி நாட்டில் மொத்தம் 2,615,923 நபர்கள் அல்லது 83.1 சதவீத இளம் பருவத்தினர் தங்கள் கோவிட்-19 தடுப்பூசியின் இரு அளவையும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் CovidNow போர்ட்டலின் அடிப்படையில், மலேசியாவில் 2,766,649 தனிநபர்கள் அல்லது 87.9 சதவீத இளம் பருவத்தினர் தடுப்பூசியின் முதல் அளவையாவது பெற்றுள்ளனர்.

18 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள், மொத்தம் 22,455,762 நபர்கள் அல்லது 95.9 சதவீதம் பேர் தடுப்பூசியை முடித்துள்ளனர், அதே நேரத்தில் 22,957,009 நபர்கள் அல்லது 98 சதவீதம் பேர் குறைந்தபட்சம் முதல் டோஸைப் பெற்றுள்ளனர்.

நேற்று விநியோகிக்கப்பட்ட மொத்தம் 113,741 தடுப்பூசிகளில், முதல் டோஸாக 4,929, இரண்டாவது டோஸாக 6,376 மற்றும் பூஸ்டர் டோஸ்கள் 102,436 என பயன்படுத்தப்பட்டன.

தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் இதுவரை வழங்கப்பட்ட தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 52,666,489 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here