காஜாங், உலு லங்காட்டின் பெரானாங்கில் உள்ள ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலை தீப்பிடித்து எரிந்ததால் காற்றில் பெரும் புகை மூட்டம் ஏற்பட்டது.
வெள்ளிக்கிழமை (ஜனவரி 13) மதியம் 12.15 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகவும், ஐந்து தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் டத்தோ நோராஸாம் காமிஸ் தெரிவித்தார்.
ஒற்றைத் தளக் கட்டிடம் 90% எரிந்துவிட்டது. பிற்பகல் 2.45 மணியளவில் நாங்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தோம். ஆனால் தீயை முழுமையாக அணைக்கும் முயற்சிகள் இன்னும் தொடர்கின்றன என்று வெள்ளிக்கிழமை தொடர்பு கொண்டபோது அவர் கூறினார். இந்த சம்பவத்தின் போது எவரும் காயமடையவோ அல்லது உயிரிழக்கவோ இல்லை என்றார்.