சாலை விபத்தில் ஓய்வு பெற்ற போலீஸ்காரர் ஒருவர் உயிரிழந்தார்

Jalan Kluang-Teck Wah Heng சாலையின் 32.5 ஆவது கிலோமீட்டரில், சக்திவாய்ந்த மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதியதில் ஓய்வு பெற்ற போலீஸ்காரர் ஒருவர் உயிரிழந்ததாக, குளுவாங் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் பஹ்ரின் முகமட் நோர் கூதெரிவித்தார்.

“காலை 10.35 மணியளவில், பண்டார் ஸ்ரீ இம்பியானில் வசிக்கும் முகமட் ஃபிர்தௌஸ் அப்துல்லா, 61, என்ற பாதிக்கப்பட்டவர் ஓட்டிச்சென்ற Kawasaki Z250 ரக மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில், அவர் வலது தொடை, தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்றார்.

“சம்பவம் நடந்த இடத்திற்கு வந்தபோது, ​​சாலையில் மஞ்சள் கோடு இருந்ததால் மோட்டார் சைக்கிளின் வேகத்தை குறைக்க முயன்றபோது, பாதிக்கப்பட்டவரின் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்திலிருந்த மின் கம்பத்தில் மோதியது,” என்று நம்பப்படுவதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here