நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்கு வழி வகுக்கும் வகையில், எதிர்வரும் மே மாதம் மாநில சட்டமன்றம் கலைக்கப்படலாம் என மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹாருன் தெரிவித்துள்ளார்.
“கொள்கையளவில், நாங்கள் மே மாதத்தில் சட்டமன்றத்தைக் கலைக்க ஒப்புக்கொண்டோம்… ஜூன் அல்லது ஜூலையில் மாநில தேர்தல்கள் நடைபெறலாம், எனவே எங்களுக்கு அதிக நேரம் இல்லை, இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளன” என்று அவர் கூறினார்.
“இந்தத் தேர்தலில் நாங்கள் தேசிய முன்னணியுடன் இணைந்து செயற்படுவோமா?, இல்லையா என்பது குறித்து விரைவில் முடிவு செய்வோம்” என்று, நேற்று நெகிரி செம்பிலானில் நடந்த பிகேஆர் மாநாட்டிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.
சிலாங்கூர், பினாங்கு, நெகிரி செம்பிலான், கெடா, கிளாந்தான் மற்றும் திரெங்கானு ஆகிய ஆறு மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.