அத்துமீறி வீட்டுக்குள் புகுந்த நபர் கைது – சுபாங் ஜெயாவில் சம்பவம்

சுபாங் ஜெயா, SS19 இல் ஒரு வீட்டிற்குள் அத்துமீறி புகுந்ததாக சந்தேகிக்கப்படும் 45 வயதான ஒரு நபரை போலீசார் கைது செய்ததாக, சுபாங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் வான் அஸ்லான் வான் மாமட் கூறினார்.

கடந்த சனிக்கிழமை பாதிக்கப்பட்ட வீட்டுக்காரரிடமிருந்து காவல்துறைக்கு கிடைத்த புகாரின் அடிப்படையில், அதாவது பாதிக்கப்பட்டவர் கடந்த திங்கட்கிழமை காலை 9.25 மணிக்கு வீட்டை விட்டு வெளியேறியதாகவும், பின்னர் காலை 10 மணிக்கு வீடு திரும்பியதாகவும் புகார்தாரர் கூறினார்.

புகார்தாரர் வீட்டிற்கு திரும்பி வந்தபோது, அவரது மற்றும் அவரது சகோதரியின் முக்கிய ஆவணங்கள் மற்றும் பணம் கொண்ட பைகள் காணாமல் போனதைக் கண்டறிந்தார். அதனைத் தொடர்ந்து அவர் போலீசில் புகாரளித்தார்.

“கண்காணிப்பு கேமெரா காட்சிகளை ஆய்வு செய்ததில், அடையாளம் தெரியாத ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து புகார்தாரர் மற்றும் குடும்பத்தினரின் பைகளை எடுத்துச் சென்றது கண்டறியப்பட்டது, மேலும் மொத்தம் RM5,800 மதிப்புள்ள பணம் காணாமல் போயுள்ளது” என்று அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

புகாரின் அடிப்படையில், சுபாங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் (IPD) போலீஸ் குழு விசாரணை நடத்தி, சந்தேக நபரை கைது செய்ததாக வான் அஸ்லான் கூறினார்.

குறித்த சந்தேக நபரிடம் போதைப்பொருள் உட்பட ஒன்பது முந்தைய குற்றவியல் பதிவுகள் இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. சந்தேக நபரிடமிருந்து ” புகார்தாராரின் உடமைகள் உட்பட சில பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்,” என்று அவர் கூறினார்.

குற்றவியல் சட்டத்தின் 380ஆவது பிரிவின்படி, விசாரணைக்கு உதவுவதற்காக சந்தேகநபர் ஜனவரி 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here