வரும் ஆறு மாநிலத் தேர்தல்களின் போது இரு கட்சிகளும் போட்டியிடும் இடங்களைப் பங்கீடு செய்வது குறித்து பக்காத்தான் ஹராப்பான் (PH) இன்னும் அதிகாரப்பூர்வமாக பாரிசான் நேசனல் (BN) உடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இந்த விஷயம் தொடர்பாக BN மாநிலத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும், கலந்துரையாடுவதற்கும் மாநிலத்தில் உள்ள தமது கட்சித் தலைவர்களுக்கு எந்தத் தடையும் இல்லை என்று பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான அவர் கூறினார்.
வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களில் இரு கட்சிகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பைப் பற்றி BN உடன் PH அதிகாரபூர்வமற்ற முறையில் விவாதங்களைத் தொடங்கியுள்ளதாக, கடந்த சனிக்கிழமையன்று, PKR துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிலாங்கூர், பினாங்கு, நெகிரி செம்பிலான், கெடா, கிளாந்தான் மற்றும் திரெங்கானு ஆகிய மாநிலங்களில் இந்தாண்டு தேர்தல் நடைபெறவுள்ளது.