சபா அமைச்சரவையில் புதிய துணை அமைச்சர்கள் நியமனம்

சபா முதலைமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹஜிஜி நோர், துணை அமைச்சர்கள் அடங்கிய மாநில அமைச்சரவையை இன்று அறிவித்தார்.

டத்தோ ருஸ்லான் முஹாராம் முதலமைச்சரின் துணை அமைச்சராகவும், விவசாயம் மற்றும் மீன் வளர்ப்புத்துறையின் துணை அமைச்சராக இனானாம் பெதோ காடிமும், துணை நிதி அமைச்சராக தான் லீ ஃபாட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு விவசாயம் மற்றும் மீன் வளர்ப்புத்துறை துணை அமைச்சராக இருந்த டத்தோ ஜேம்ஸ் ரதிப் தற்போது மாநில சமூக மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகவும், துணை நிதி அமைச்சராக இருந்த டத்தோ ஜஸ்னி டாயா அப்பதவியிலிருந்து தானாகவே விலகி இருப்பதால், அவருக்கு பதிலாக தான் லீ அப்பதவிக்கு நியமிக்கப்பட்டிருக்கின்றார்.

இவர்களைத் தவிர, காபுங்கான் ரக்யாட் சபாவை (GRS) டத்தோ ஶ்ரீ டாக்டர் ருட்டி அவா கிராமப்புற மேம்பாட்டு துணை அமைச்சராகவும், டத்தோ ஃபைருஸ் ரென்டான், இளைஞர், விளையாட்டுத்துறை துணை அமைச்சராகவும், தேசிய முன்னணியைச் சேர்ந்த டத்தோ ஹருண் டுராபி புத்தாக்க தொழில்நுட்ப மற்றும் அறிவியல் துறை துணை அமைச்சராகவும், தேசிய முன்னனியின் டத்தோ அன்டி சுர்யாடி பேன்டி தொழில்துறை மேம்பாட்டுத்துறை துணை அமைச்சராகவும் நியமிக்கபப்ட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here