தான் வணிகத்தில் கவனம் செலுத்துவதாகவும், அரசியலுக்கு திரும்புவதற்கான எந்த திட்டமும் இல்லை என்கிறார் கைரி

கோலாலம்பூர் :

தற்போது தான் வணிகத்தில் ஈடுபட்டுவருவதாகவும், அரசியலுக்குத் திரும்பும் திட்டம் எதுவும் இல்லை என்று, முன்னாள் சுகாதார அமைச்சரும் முன்னாள் அம்னோ இளைஞர் தலைவருமான கைரி ஜமாலுடின் தெரிவித்துள்ளார்.

“நான் இப்போது என்ன செய்கிறேனோ அதில் நான் மிகவும் திருப்தி அடைகிறேன். எனவே, குறைந்தபட்சம் இந்த ஆண்டு இறுதி வரை, நான் அரசியலுக்குத் திரும்புவது பற்றி யோசிக்கவில்லை,” என்று அவர் வியாழக்கிழமை (மே 29) கூறியதாக தெரிகிறது.

2023 இல் அம்னோவை இடு வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, கைரி அம்னோவுக்குத் திரும்பும் பணியில் ஈடுபட்டுள்ளதாக சமீபத்தில் இணையதளங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்நிலையில், டத்தோஸ்ரீ ரஃபிஸி ரம்லி மற்றும் நிக் நஸ்மி நிக் அகமது ஆகியோர் தங்கள் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்த பிறகு கைரி அமைச்சரவையில் மீண்டும் இடம் பெறுவது குறித்த ஊகங்கள் அதிகரித்துள்ளன என்பது கவனிக்கத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here