போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையதாக நம்பப்படும் ஒரு குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி மற்றும் மகன் கைது

செபெராங் பிறை தெங்காவில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜன 24) போலீசார் மேற்கொண்ட இரண்டு நடவடிக்கையில் RM53,265 மதிப்புள்ள போதைப் பொருட்களைக் கைப்பற்றியதுடன், ஒரு குடும்பத்தை சேர்ந்த கணவன் மற்றும் மனைவி மற்றும் அவர்களது மகன் ஆகியோரை கைது செய்ததாக செபெராங் பிறை தெங்கா மாவட்ட காவல்துறை துணைத் தலைவர், முகமட் நூர் தாவூட் கூறினார்.

இதில் 49 வயதுடைய முதல் சந்தேக நபர், புக்கிட் மின்யாக்கில் உள்ள ஒரு விளையாட்டு மைதானத்தில் காலை 9 மணியளவில் தடுத்து வைக்கப்பட்டார், முதலில் அவரிடமிருந்து RM500 மதிப்புள்ள 7.2 கிராம் கஞ்சாவை போலிசார் கைப்பற்றினர்.

“வாடிக்கையாளர் போதைப்பொருளை எடுத்துச் செல்வதற்காக காத்திருந்தபோது குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து “காலை 10.30 மணியளவில் புக்கிட் மெர்தாஜாமில் உள்ள ஒரு இரட்டை அடுக்கு மாடி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது, அங்கு சந்தேகத்தின் பேரில் முதல் சந்தேக நபரின் 53 வயது மனைவி மற்றும் 23 வயதான அவர்களது மகன் ஆகியோரும் தடுத்து வைக்கப்பட்டனர்,” என்று அவர் இன்று நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

மேலும் இந்த சோதனையில், 1,363 கிராம் எடையுள்ள நான்கு கட்டி பதப்படுத்தப்பட்ட கஞ்சா மற்றும் 2,209 கிராம் ஹெரோயின் என்பன பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மொத்த மதிப்பு RM52,715 என்றும் அவர் கூறினார்.

அத்தோடு சந்தேகநபர்கள் பயன்படுத்திய இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் கைப்பற்றியதாகவும் முஹமட் நூர் கூறினார்.

ஒரு குடும்பத்தால் நடத்தப்படும் இந்த போதைப்பொருள் கடத்தல் கடந்த 2022 ஜனவரி முதல் செயற்பட்டுவருவதாகவும்,
அவர்களில் இருவருக்கு போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் உட்பட முந்தைய குற்றப் பதிவுகளைக் கொண்டிருந்தனர் என்றும் அவர் கூறினார்.

ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952 இன் பிரிவு 39B இன் கீழ் விசாரணையில் உதவ சந்தேக நபர்கள் ஏழு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here