தவறான உரிமைகோரல்கள்: துப்புரவு சேவை நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் தலைமை மேற்பார்வையாளர் MACCயால் கைது

ஷா ஆலம்: 2020 முதல் கடந்த ஆண்டு வரை RM60,000 க்கும் அதிகமான  தவறான உரிமைகோரல்களை சமர்ப்பித்த வழக்கு விசாரணைக்காக ஒரு பெண் உட்பட இரு நபர்களை மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (MACC) கைது செய்துள்ளது.

ஆதாரத்தின்படி, சந்தேகத்திற்குரிய இருவர், 30 வயதுடைய ஒரு ஆணும், 50 வயதுடைய ஒரு பெண்ணும், சிலாங்கூர் MACC அலுவலகத்தில்  (ஜனவரி 26) மாலை 6.30 மணியளவில் சாட்சியமளிக்க வந்தபோது கைது செய்யப்பட்டனர்.

இருவரும் கோலாலம்பூரில் உள்ள ஒரு அரசாங்க கட்டிடம் சம்பந்தப்பட்ட சேவைகளுக்கு தவறான உரிமைகோரல்களை கூறியதாக நம்பப்படும் ஒரு துப்புரவு சேவை நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் தலைமை மேற்பார்வையாளர் என்று அது கூறியது.

இரண்டு சந்தேக நபர்களும் 2020 முதல் 2022 வரை RM4.2 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள ஒப்பந்தங்களை உள்ளடக்கிய தவறான உரிமைகோரல் ஆவணங்களைச் சமர்ப்பித்ததாக நம்பப்படுகிறது.

சிலாங்கூர் எம்ஏசிசி இயக்குநர் டத்தோ அலியாஸ் சலீம், கைது செய்யப்பட்டவர்களை உறுதிப்படுத்தியதுடன், எம்ஏசிசி சட்டம் 2009ன் பிரிவு 18இன் படி இந்த வழக்கு விசாரிக்கப்பட்டதாகக் கூறினார்.

இரண்டு சந்தேக நபர்களும் இன்று (ஜனவரி 27) காலை இங்குள்ள ஷாஆலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படுவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here