RM250 கடனுக்கான சண்டை ஆடவரின் மரணத்திற்கு வழிவகுத்தது

பெட்டாலிங் ஜெயா: RM250 கடன் தொடர்பாக இரண்டு வயதான நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் அவர்களில் ஒருவர் இன்று காலை கோலாலம்பூரில் உள்ள கெப்போங்கில் இறந்தார்.

செந்தூல் போலீசாரின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்ட 76 வயதானவருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை சந்தேக நபர் செலுத்தத் தவறியதால், மெட்ரோ ப்ரிமாவில் உள்ள ஒரு உணவகத்தில் சண்டை ஏற்பட்டது.

காலை 6.45 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், 63 வயதான சந்தேக நபர் பிளாஸ்டிக் நாற்காலியால் பாதிக்கப்பட்டவரைத் தாக்கினார். மேலும் பாதிக்கப்பட்டவர் அவரை ஒரு தடியால் தாக்கினார் என்று செந்தூல் காவல்துறைத் தலைவர் பெஹ் எங் லாய் கூறினார்.

அப்பகுதியில் இருந்த சில மக்கள் தொண்டர் படை (ரேலா) உறுப்பினர்கள் தலையிட்டு இருவரையும் பிரித்ததாக அவர் கூறினார்.ந்பாதிக்கப்பட்டவர் அங்கிருந்து வெளியேறினார், ஆனால் உணவகத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் சரிந்து விழுந்து இறந்தார்.

காலை 11 மணிக்கு சம்பவம் குறித்து புகார் அளிக்க வந்த சந்தேக நபர் கெப்போங் காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்டார் என்று பெஹ் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். கொலைக்கான விசாரணைக்கு உதவுவதற்காக சந்தேகநபருக்கு நாளை விளக்கமறியலில் வைக்கும் உத்தரவை போலீசார் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here