“இப்போதைக்கு பேரிடர் அவசரநிலையை அறிவிக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை” என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
“வெள்ள பேரிடர் அவசரநிலை அறிவிக்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கவில்லை, ஏனெனில் வெள்ளம் சில மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களை மட்டுமே ஏற்பட்டுள்ளது. அந்தந்த மாநில பேரிடர் மேலாண்மைக் குழுக்கள் (SDMC) மற்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழுக்களுடன் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
“அத்தோடு வெள்ள நிவாரண உதவிகள் அனைத்து குடும்பத் தலைவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில், வெள்ளத்திற்குப் பிந்தைய உதவி உட்பட அனைத்தையும் நாங்கள் மேற்கொள்ள வேண்டி உள்ளது ,” என்று அவர் மெர்சிங் பாலிடெக்னிக் தற்காலிக நிவாரண மையத்தைப் பார்வையிட்ட பின்னர், அங்கு நடந்த ஒரு ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.
அவருடன் ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹபீஸ் காசி மற்றும் ஜோகூர் மாநில செயலாளர் டான்ஸ்ரீ டாக்டர் அஸ்மி ரோஹானி ஆகியோரும் கலந்து கொண்டனர்.