டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் 1எம்டிபி ஊழல் வழக்கு விசாரணைக்கு தலைமை தாங்கிய மூத்த வழக்கறிஞர் டத்தோஸ்ரீ கோபால் ஸ்ரீ ராம் காலமானார்.
கூட்டரசு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி (79 ), நுரையீரல் தொற்றுக்காக புதன்கிழமை (ஜனவரி 18) கோலாலம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டார்.
நஜிப்பின் மனைவி ரோஸ்மா மன்சோர் சம்பந்தப்பட்ட ரிங்கிட் 1.25 பில்லியன் சோலார் ஹைப்ரிட் திட்ட ஊழல் வழக்கின் முதன்மை வழக்கறிஞராகவும் இருந்தார்.