அலோர் காஜா,
2025-ம் ஆண்டு வீரர் தினத்தையொட்டி தொடங்கப்பட்ட Tabung Pahlawan நிதி திரட்டும் இயக்கம் ஜூலை 24 வரை மொத்தம் வெ. 2.186 மில்லியன் நிதியை திரட்டி பொதுமக்களின் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு மலேசியரும் குறைந்தது ரூ.1 வழங்கினால், அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதற்காக QR குறியீடு வழி நன்கொடை திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டு, சமூக ஊடகங்கள் மற்றும் அரசாங்கத்தின் அதிகார பூர்வ சேனல்களில் பரவலாக பகிரப்பட்டுவருகிறது என்று பாதுகாப்பு துணை அமைச்சர் அட்லி ஸஹாரி தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மலாக்காவைச் சேர்ந்த 120 முன்னாள் மலேசிய ஆயுத படை (MAF) வீரர்கள் 22 அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்டனர். அவர்களுக்கு வாழ்வுக்குத் தேவைப்பட்ட நிதி உதவி, உயர்கல்வி உதவி, வீடு பழுது செய்தல் மற்றும் பாகுல் ரஹ்மா உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
தற்போது வெ. 1.51 இலட்சம் முன்னாள் வீரர்கள் Veteran Digital Card பயன்படுத்தி வருகின்றனர். இந்த Cardஐ உடன் எடுத்துசெல்ல வேண்டிய அவசியமில்லை, அனைத்து தகவல்களையும் ஸ்மார்ட்போனில் காணும் வசதியை இது வழங்குகிறது. இந்த டிஜிட்டல் மாற்றம் நலத்திட்ட சேவைகளை மேம்படுத்தவும், பாதுகாப்பு நல மேலாண்மையை நவீனமாக்கவும் உதவுவதாக அமைச்சர் மேலும் கூறினார்.




















