கடந்த ஜனவரி 18ஆம் தேதி தொடங்கி சீனப் புத்தாண்டு பண்டிகைக் காலத்துடன் (Op TBC) இணைந்த சாலைப் பாதுகாப்பு நடவடிக்கையின் போது, மொத்தம் 1,189 வாகனங்கள் சம்பந்தப்பட்ட 2,337 போக்குவரத்து குற்றங்களைப் பதிவு செய்துள்ளது.
இந்த நடவடிக்கையில் மொத்தம் 13,041 வாகனங்களை ஆய்வு செய்ததாகவும், அதில் ஓட்டுநர் உரிமம் இல்லாதது, வாகன உரிமம் இல்லாதது, சிவப்பு சமிக்ஞை விளக்கை இயக்குவது மற்றும் இரட்டைக் கோட்டைத் தாண்டிச் செல்வது போன்ற குற்றங்கள் பதிவு செய்யப்பட்டதாக அதன் இயக்குநர் ஹனிஃப் யூசப்ரா யூசுப் தெரிவித்தார்.
“இந்த நடவடிக்கை நடந்த காலகட்டம் முழுவதும், மாநில போக்குவரத்து துறை, டிப்போக்கள் மற்றும் டெர்மினல்களில் பேருந்துகளில் சோதனை நடத்துதல், நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய சாலைகளில் ரோந்து மற்றும் மோட்டார் சைக்கிள் ரோந்து அமலாக்கம் உள்ளிட்ட ஏழு அமலாக்க உத்திகளை செயல்படுத்தியதாகவும்” அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.
மேலும், சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 பிரிவு 64 (1)ன் கீழ் மொத்தம் 5,181 மோட்டார் சைக்கிள்கள் சோதனையிடப்பட்டதாகவும், அதில் 579 மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், இது தவிர 96 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.









