அம்னோ தேர்தல் திட்டமிட்டபடி பிப்ரவரி 1 முதல் நடைபெறும் – அம்னோ தலைமை செயலாளர்

அம்னோவின் சில தொகுதிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தாலும் மொத்தம் 191 அம்னோ தொகுதிகள் உட்பட 22,000 அம்னோ கிளைகளுக்கும் உள்ளகத் தேர்தல்களை திட்டமிட்டபடி அம்னோ நடத்தும் என்று அதன் தலைமை செயலாளர் டத்தோஸ்ரீ அகமட் மஸ்லான் தெரிவித்தார்.

வரும் புதன்கிழமை (பிப்ரவரி 1) தொடங்கி நாடுமுழுவதும் 26 நாட்களுக்கு நடைபெறும் என்றும், அம்னோ தொகுதி தேர்தல் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக தாம் நிர்வாகிகளை நியமித்துள்ளதாகவும், குறிப்பாக இடைநிறுத்தப்பட்டுள்ள ஆராவ் மற்றும் தானா மேரா பிரிவுகளுக்கும் நிர்வாகி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்றார்.

“இதுவரை, ஆராவ் மற்றும் தானா மேரா ஆகிய இரண்டு பிரிவுகள் மட்டுமே இடைநிறுத்தப்பட்டுள்ளன, ஆனால் இது அனைத்து கிளைகள் மற்றும் பிரிவுகளிலும் வாக்குப்பதிவு செயல்முறையை சீர்குலைக்காது,” என்று, நேற்று பெனூட்டில் உள்ள ஜாலான் வாவாசானில் RM13 மில்லியன் மதிப்புள்ள பெனட் 4 தண்ணீர் தொட்டியை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here