நாடு முழுவதும் Op Limau என்ற குறியீட்டுப் பெயரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 905 பேரை போலீசார் கைது செய்தனர். அத்துடன் அவர்களிடமிருந்து RM513,793 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது என்று தேசிய காவல்படை செயலாளர் டத்தோ நூர்சியா சாதுடின் தெரிவித்தார்.
“சீனப் புத்தாண்டுடன் இணைந்து போலீசாரால் மேற்கொள்ளப்பட்ட Op Limau நடவடிக்கை கடந்த ஜனவரி 15 முதல் 29 வரை நடந்தது, இதில் மொத்தம் 137 சோதனைகள் நடத்தப்பட்டதாகவும், இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சூதாட்ட நடவடிக்கைகள் குறித்த தகவல் தெரிந்தவர்கள் Op Limau WhatsApp ஹாட்லைன் 016-5773477 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என்றும் நூர்சியா மேலும் கூறினார்.









