ஜாசினில் மூத்த குடிமகனைக் கொன்றதாக வேலையில்லாத ஒருவர் மீது இன்று மாஜிஸ்திரேட் கோர்ட்டில் குற்றம் சாட்டப்பட்டது.
பீட்டர் டேவிட், 20, கடந்த ஜனவரி 20 ஆம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் இங்குள்ள மெர்லிமாவ், கம்போங் பூலாய் தெராட், 16ஆவது கி.மீட்டரில் மிசா எம்டி அமீன் 91, என்பவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கும் தண்டனைச் சட்டம் பிரிவு 302ன் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
மாஜிஸ்திரேட் டான் சாய் வெய் முன் தமிழில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பிறகு அந்த நபர் தலையசைத்தார். ஆனால் எந்த மனுவும் பதிவு செய்யப்படவில்லை. ஆவணங்களை சமர்பிக்க மார்ச் 8 ஆம் தேதிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.















