பிப்ரவரி 8 முதல் மார்ச் 7 வரையான ஒரு மாத காலப்பகுதியில், போத்தல் சமையல் எண்ணெய்க்கான அதிகபட்ச சில்லறை விலை மாறாமல் இருக்கும் என்று, உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் (KPDN) தெரிவித்துள்ளது.
ஒரு கிலோகிராம் சமையல் எண்ணெய் போத்தலின் விலை RM6.90 ஆகவும், 2 கிலோ RM13.30 ஆகவும், 3 kg RM19.60 ஆகவும், 5 kg RM30.90 ஆகவும் இருக்கும் என்றும் அது தெரிவித்தது.
“ஜனவரி மாதத்தில் காச்சாய் எண்ணெய்யின் விலை சிறிது அதிகரித்திருந்தது, அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில், அரசாங்கமும் தொழில்துறையினரும் இந்த காலத்திற்கு சுத்தமான போத்தல் சமையல் எண்ணெயின் விலையை பராமரிக்க ஒப்புக்கொண்டுள்ளனர்” என்று KPDN இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதிகபட்ச விலைக்கு மேல் சமையல் எண்ணெயை விற்பனை செய்யும் யாராயினும், விலைக் கட்டுப்பாடு மற்றும் இலாபம் ஈட்டுதல் எதிர்ப்புச் சட்டம் 2011ன் கீழ் அபராதம் விதிக்கப்படலாம் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.









