MySejahtera சரிபார்ப்பது ஏப்ரல் மாதத்தில் அகற்றப்படலாம் என்கிறார் கைரி

ஏப்ரல் 1 ஆம் தேதி மலேசிய எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்ட பிறகு கோவிட்-19 தொற்றின் போக்கைப் பொறுத்து MySejahtera செக்-இன்கள் ஒரு மாதத்தில் அகற்றப்படலாம்.

இந்த நாடு தனது எல்லைகளை பயணிகளுக்குத் திறந்த பிறகும், இந்த ஏப்ரல் 1 ஆம் தேதி கோவிட் -19 கட்டுப்பாடுகளை நீக்கிய பிறகும் நாங்கள் முதலில் மைசெஜ்த்ரா குறித்து கண்காணிக்க  விரும்புகிறோம்.

நமக்கு நோன்பு மாதம் வரவிருக்கிறது. நடமாட்டம் மற்றும் தொற்று முறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இல்லை என்றால், மொபைல் செக்-இன்களை நாங்கள் கைவிடலாம். இதற்கு இன்னும் ஒரு மாத கால அவகாசம் தேவை. மலேசிய மருத்துவச் சங்கம் (MMA) வெளியிட்ட அறிக்கைக்கு அவர் பதிலளித்தார். இது MySejahtera செக்-இன்களை ரத்து செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்தது. மலேசியா கோவிட் தொற்றின் முடிவு  நிலைக்கு மாற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here