புதுச்சேரியில் சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு 3 ஆண்டுகள் சிறை -வெளியான அதிரடி அறிவிப்பு

தமிழ் நாட்டிலுள்ள புதுச்சேரியில் சிறுவர்கள் வாகனம் ஓட்டினால், அவர்களின் பெற்றோருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என வெளியான போலீஸ் அறிவிப்பு அனைவராலும் வரவேற்கப்படுகிறது.

புதுவையில் சிறுவர்கள் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டி செல்வது அதிகரித்து வருகிறது. அதனால் வாகனம் ஓட்டும் சிறுவர்களின் பெற்றோருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிப்பதோடு, வாகனத்தின் பதிவுச் சான்று ஓராண்டிற்கு ரத்து செய்யப்படும் என்றும், மேலும் வாகனத்தை ஓட்டிய சிறுவர்களுக்கு 25 வயது வரை பழகுனர் மற்றும் ஓட்டுனர் உரிமம் தகுதி ரத்து மற்றும் சிறார் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்படும் என்று புதுவை போக்குவரத்து துறை ஆணையர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

எனவே, பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகள் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்க அனுமதிக்க வேண்டாம். மேலும் புதுவையில் பலர் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டுவது ஊர்ஜிதம் ஆகியுள்ளது. ஹெல்மெட் அணியாதது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு முதல்முறை ரூ.ஆயிரம் அபராதம் விதிப்பதோடு, 3 மாதத்திற்கு ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும். வாகனம் ஓட்டும்போது ஓட்டுனர் உரிமத்தின் ஒரிஜினல் வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். என்று அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பின் மூலம் தெரிவித்துள்ளார்.

அவரின் இந்த அறிவிப்பிற்கு பலதரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here