முகத்தை பொலிவாக்க அழகு கிரீமை பயன்படுத்திய மாணவியின் விருப்பம் சிறுநீரகப் பாதிப்பில் முடிந்தது

தம்மை அழகாக காட்டுவதற்கு எந்த கிரீமை வேண்டுமானாலும் பயன்படுத்தும் ஒருவித மோகம் தற்கால இளையோர் மத்தியில் பரவலாக காணப்படுகிறது. ஆனால் அதன் விளைவுகளை அனுபவிக்கும் போது, ஏன் பூசினோம் என வேதனைக் கொள்வார்கள். இப்போது அதுபோன்ற ஒரு ஆபத்தில் இந்தியாவின் மும்பையை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் சிக்கியுள்ளார்.

மாணவி தான் அழகாய் தெரிவதற்காக தனது ஒப்பனைக் கலைஞர் கொடுத்த சொந்த தயாரிப்பு ஃபேசியல் கிரீமை தொடர்ந்து பயன்படுத்தியுள்ளார். அவரது முகம் பளபளப்பானதை பார்த்து, பிறர் பாராட்ட பலருக்கும் கிரீமை பரிந்துரை செய்ய தொடங்கியிருக்கிறார்.

மேலும், மாணவியின் தாயும், தங்கையும் அந்த கிரீமை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். நான்கு மாத காலம் பயன்படுத்தவும் அவர்களது முகம் பளிச்சென மின்னியுள்ளது. ஆனால் அவர்களது சிறுநீரகத்தின் செயல்பாடுதான் மங்க தொடங்கியிருக்கிறது.

இதையடுத்து சிறுநீரக பிரச்சினையுடன் அவர்கள் தனியார் மருத்துமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் பயன்படுத்திய பொருட்களை ஆய்வு செய்தபோது, அழகு கிரீமில் பாதரசம் அனுமதிக்கப்பட்ட அளவை விடவும் ஆயிரம் மடங்கு அதிகம் இருந்தது மருத்துவர்களை தூக்கிவாரிப்போட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் இரத்தத்தில் பாதரசம் அளவு 46 ஆக இருந்துள்ளது. இது சாதரணமாக 7-க்கும் குறைவாக இருக்க வேண்டும். கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கல்லூரி மாணவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here