சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதில் நீர்ச்சத்தின் பங்கு என்ன..?

நாம் உயிர் வாழவும், ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் தண்ணீர் மிக அவசியமானது என்று நம் எல்லோருக்கும் தெரியும். மிக குறிப்பாக, உடலில் உள்ள யூரிக் அமில அளவுகளைக் கட்டுப்படுத்துவதில் யூரிக் அமிலத்தின் பங்கு மிக முக்கியமானது. குறிப்பிட்ட சில உணவுகள் மற்றும் பானங்களை நாம் எடுத்துக் கொள்ளும்போது அதில் உள்ள கழிவுகளானது யூரிக் அமிலமாக உருவாகும்.

இந்த யூரிக் அமிலம் சராசரி அளவில் இருக்கும் வரையில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அதுவே மிகுதியானால் மூட்டுகளில் வலி மற்றும் சிறுநீரகக் கல் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். இருப்பினும், போதுமான அளவுக்கு நாம் தண்ணீர் அருந்தினால் இந்த யூரிக் அமிலம் நம் உடலில் இருந்து சுத்திகரிக்கப்படும்.

நிபுணர்கள் சொல்வது என்ன.! உஜாலா சிக்னஸ் குழும மருத்துவமனைகளின் நிறுவனர் மற்றும் இயக்குநருமான, மருத்துவர் சுச்சின் பஜாஜ் இதுகுறித்துப் பேசுகையில், “நம் உடலில் நீர்ச்சத்தை முறையாக தக்க வைத்துக் கொண்டால் யூரிக் அமிலமானது சிறுநீர் வழியாக வெளியேற்றம் செய்யப்படும்.

தேவையான அளவுக்கு தண்ணீர் எடுத்துக் கொண்டால் சிறுநீரகங்கள் முறையாக செயல்படும். ஆனால், தண்ணீர் தேவையான அளவு எடுத்துக் கொள்ளவில்லை என்றால் உடலில் யூரிக் அமிலத்தின் அளவுகள் அதிகரித்து, அதன் விளைவாக உடல்நல பாதிப்புகள் உண்டாகும்’’ என்று தெரிவித்தார்.

உடல் பருமன் காரணமாக பிரச்சினை : உடலில் பல வகை நோய்கள் உண்டாகுவதற்கு அடிப்படை காரணம் உடல் பருமன் ஆகும். அந்த வகையில் உடல் பருமன் அதிகரிக்கும்போது யூரிக் அமிலமும் அதிகரிக்கும். நாம் சரியான அளவுக்கு தண்ணீர் எடுத்துக் கொண்டால் உடல் எடையும் சீரான அளவில் இருக்கும்.

உடல் உறுப்புகளின் ஆரோக்கியம் மேம்பட : தாகம் எடுக்கும் போது சர்க்கரை கலந்த பானங்கள் அருந்தும் பழக்கம் பலருக்கு இருக்கிறது. அது தவறானது. உடலில் தேவையற்ற கலோரிகள் அதிகரிக்கவும், உடல் எடை மிகுதியாகவும் இது வழிவகை செய்யும். அதே சமயம், போதுமான அளவு தண்ணீர் அருந்தினால் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறும் மற்றும் கழிவுகளை சுத்திகரிப்பதில் உடல் உறுப்புகளுக்கு சுமை இருக்காது.

சிறுநீரகக் கல் : உடலில் நீர்ச்சத்தை தக்க வைத்துக் கொண்டால் சிறுநீரகக் கற்கள் உண்டாகாது. தேவையான அளவு தண்ணீர் அருந்துவதால் சிறுநீர் பெருகும். இதனால் கல் உருவாக வகை செய்யும் பொருட்கள் அதில் கரைந்துவிடும். சிறுநீரக் கல் வராமல் தடுத்தால் தேவையற்ற வலி மற்றும் மருத்துவ சிகிச்சைகளை தவிர்க்கலாம்.

என்னதான் தீர்வு.? உடலில் தேவையான நீர்ச்சத்தை தக்க வைத்துக் கொண்டால் யூரிக் அமிலத்தை குறைக்க முடியும் மற்றும் சிறுநீரக கல் பிரச்சினையை தடுக்க முடியும். நாளொன்றுக்கு சராசரியாக 8 கிளாஸ் அளவுக்கு தண்ணீர் அருந்த வேண்டும். எனினும், தனிநபரின் உடல்வாகு மற்றும் தேவைகளைப் பொருத்து இந்த அளவு மாறுபடலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here