WhatsApp வேலை மோசடியில் சிக்கி பெண் ஒருவர் RM89,000 இழந்தார்

கடந்த வாரம் Whatsapp மூலம் இணைய வேலை வாய்ப்பை பெற்று தருவதாக கூறி, பெண்ணிடம் RM89,560 மோசடி செய்யப்பட்டதாக, பகாங் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ ராம்லி முகமது யூசுஃப் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட 34 வயதான பெண், கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி இந்த இணைய வேலை வாய்ப்பைப் பெற்றதாகக் கூறினார், அதாவது அவர் இன்ஸ்டாகிராம் கணக்கைப் பின்தொடர்ந்து ‘லைக்’ செய்ய வேண்டும். அவ்வாறு அவர் பின்தொடரும் ஒவ்வொரு கணக்கிற்கும் தனக்கு 5 ரிங்கிட் கமிஷன் வழங்கப்படுவதாகவும், சந்தேக நபரிடம் இருந்து முதலில் 590 ரிங்கிட் லாபம் கிடைத்ததாகவும், அதனால் கவரப்பட்ட பாதிக்கப்பட்டவர் கூடுதலான இலாபம் பெற எண்ணி, பணத்தை மோசடிக்குழுவின் கணக்கிற்கு வைப்பிலிட்டார்.

பாதிக்கப்பட்ட பெண் தனது பணத்தை மோசடி செய்பவரின் ஏழு கணக்குகளுக்கு மாற்றுவதற்காக மொத்தம் 10 பரிவர்த்தனைகளைச் செய்ததாகவும், அதன் பின்னர் குறித்த வேலை வழங்குநரை தொடர்புகொள்ள முடியாது போனது என்று ராம்லி கூறினார்.

பாதிக்கப்பட்ட பெண் நேற்று குவாந்தான் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் (IPD) புகார் அளித்தார்.

சமூக வலைதளங்கள் மூலம் வழங்கப்படும் வேலை வாய்ப்புகளை நம்பி பொதுமக்கள் எளிதில் ஏமாற வேண்டாம் என்றும், ஏமாற்றப்படுவதைத் தவிர்க்க, வேலையை வழங்கும் நிறுவனம் அல்லது கட்சியின் பின்னணியைச் சரிபார்க்கவும் ராம்லி பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here