அமெரிக்காவுக்கான புதிய மலேசிய தூதராக நஸ்ரி நியமனம் – விஸ்மா புத்ரா

அமெரிக்காவுக்கான புதிய மலேசிய தூதராக முன்னாள் பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ நஸ்ரி அஜிஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.

இன்று வியாழன் (பிப்ரவரி 9) இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற உத்தியோகபூர்வ விழாவின் போது, நஸ்ரி உட்பட பத்து புதிய வெளிநாட்டு தூதர்களுக்கான நற்சான்றிதழ் கடிதங்களை மாட்சிமை தங்கிய பேரரசர் வழங்கியதாக வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு முதல், நஸ்ரி சுவிட்சர்லாந்து அல்லது அமெரிக்காவுக்கான மலேசிய தூதராக நியமிக்கப்படுவார் என்று ஊகங்கள் பரவி வந்தன. சுவிட்சர்லாந்திற்கான தூதுவராக இருக்க மறுத்துவிட்டதாக நஸ்ரி முன்பு கூறியிருந்தார், ஏனெனில் மலேசியாவுக்கான வெளிநாட்டு தூதராக நியமிக்கப்படடால் அவர் முதலில் எம்பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

இந்நிலையில், கடந்த GE15 இல் அவர் தனது பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்றத் தொகுதியை தர்காக்க தவறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், டத்தோ சையத் முகமட் ஹஸ்ரின் தெங்கு ஹுசின் @ சையத் ஹுசின் இந்தோனேசியாவுக்கான புதிய மலேசிய தூதராக நியமிக்கப்பட்டார். மேலும் பிலிப்பைன்ஸிற்கான மலேசிய தூதராக டத்தோ அப்துல் மாலிக் மெல்வின் காஸ்டெலினோ அந்தோனியும் நியமிக்கப்பட்டார்.

அத்தோடு உஸ்பெகிஸ்தானுக்கான முன்னாள் தூதராக இருந்த ஹெண்டி அசான், ஹோலி சீக்கான மலேசியாவின் தூதராகவும், ஸ்வீடனுக்கான மலேசிய தூதராக ஹபிசா அப்துல்லாவும் நியமிக்கப்பட்டனர்.

இவர்களோடு பிரேசில், செக் குடியரசு,திமோர்-லெஸ்டேக்கான தூதராகவும், குவைத், மற்றும் கென்யாவிற்கான வெளிநாட்டு தூதர்களும் நியமிக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here