சுற்றுலாப் பயணியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில், முன்னாள் வாடகை கார் ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு விடுதியில் screw driver ஐக் காட்டி, இந்தோனேசியப் பெண் சுற்றுலாப் பயணியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக, முன்னாள் வாடகைக் கார் ஓட்டுநருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனையும் 16 பிரம்படிகளும் விதிக்கப்பட்ட தீர்ப்பை, மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று உறுதி செய்தது.

48 வயதான அப்துல் கானி அப்துல் கரீமின் என்ற குற்றம் சாட்டப்பட்டவரின் இறுதி மேல்முறையீட்டை நிராகரித்த பின்னர், டத்தோ ஸ்ரீ கமாலுடின் முகமட் சைட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் குழு ஏகமனதாக முடிவு செய்தது.

“முந்தைய நீதிமன்றங்கள் (செஷன் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம்) வழங்கிய தீர்ப்புக்களை மறு பரிசீலனை செய்ய வேண்டிய அவசியமில்லை என்று கூறி, மேல் நீதிமன்றம் அவரது முறையீட்டை தள்ளுபடி செய்தது.

முதற் குற்றச்சாட்டின்படி, கடந்த 2018, டிசம்பர் 24 ஆம் தேதி பின்னிரவு 1.30 மணி முதல் அதிகாலை 2 மணி வரை, கோலாலம்பூரின் பிரிக்ஃபீல்ட்ஸில் உள்ள தாமான் செபுத்தேயில் உள்ள ஹோட்டல் அறையில் 29 வயது மற்றும் 11 மாத வயதுடைய (சம்பவத்தின் போது) இந்தோனேசிய சுற்றுலாப் பயணியை அப்துல் கானி கற்பழித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இரண்டாவது குற்றச்சாட்டில்,அதே இடம், நேரம் மற்றும் தேதியில் screw driver ஐக் காட்டி மிரட்டி, பாதிக்கப்பட்டருக்கு மரணத்தை ஏற்படுத்துவதாக அச்சுறுத்தியதாக அவர் குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here