Jalan Ulu Dedap, Taman Malinja, Kampung Gajah ஆகிய இடங்களில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 6 கடைகள் சேதமடைந்தன. இருந்தபோதும் இவ்விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் 8.55 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், அதனைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்த்திற்கு விரைந்ததாகவும் அவர் கூறினார்.
“தீ விபத்தால் மூன்று சில்லறை கடைகள் மற்றும் ஒரு உதிரிப்பாகங்கள் விற்பனைக் கடை என்பன 60 முதல் 90 விழுக்காடு சேதமடைந்தது, அதேநேரத்தில் மற்றொரு தளபாடங்கள் கடை 10 விழுக்காடு எரிந்துள்ளது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
மூத்த தீயணைப்பு அதிகாரி II ரஹ்மான் பீ தலைமையிலான இந்த தீயணைப்பு நடவடிக்கை அதிகாலை 3.27 மணிக்கு முடிந்தது என்று அவர் மேலும் கூறினார்.