கோலாலம்பூர்: ஆத்திரமூட்டும் மற்றும் தேசத்துரோக இடுகைகளைப் பதிவேற்றியதற்காக சனிக்கிழமை கைது செய்யப்பட்ட முகநூல் கணக்கின் உரிமையாளர் நோங் மஸ்லான் இன்று போலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
காவல் துறை செயலர் டத்தோ நூர்சியா சாதுடின், இன்று வெளியிட்ட அறிக்கையில், 61 வயது முதியவரின் தடுப்புக்காவல் உத்தரவு இன்றுடன் முடிவடைந்ததால் விடுவிக்கப்பட்டதாகவும், மலேசிய தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா ஆணையத்திடம் இருந்து வழக்கு தொடர்பான தடயவியல் ஆய்வு அறிக்கை இன்னும் காவல்துறைக்கு வரவில்லை என்றும் கூறினார்.
தேசத் துரோகச் சட்டம் 1948 இன் பிரிவு 4(1)ன் கீழ், தேசத்துரோகப் போக்கைக் கொண்ட செயலைச் செய்ததற்காக, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 504, அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதிப்பு செய்ததற்காக மற்றும் பிரிவு 233 இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது என்றார்.
வழக்கு தொடர்பான விசாரணை ஆவணம் (IP) மேலதிக நடவடிக்கைக்காக அட்டர்னி ஜெனரல் அறைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். சந்தேக நபர் கடந்த சனிக்கிழமை மலாக்கா கம்போங் உலுவில் கைது செய்யப்பட்டார். இதன் போது இரண்டு கையடக்கத் தொலைபேசிகளையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.








