சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் பகுதிகளில் நீர் விநியோகம் 94 விழுக்காடு சீரடைந்தது

ரந்தாவ் பாஞ்சாங் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் (WTP) நீர் உட்கொள்ளலில் ஏற்பட்ட துர்நாற்றம் காரணமாக, சிலாங்கூர், மற்றும் கோலாலம்பூரின் சில பகுதிகளில் ஏற்பட்ட தற்காலிக நீர் விநியோகத்தடையால் பாதிக்கப்பட்ட ஏழு பகுதிகளுக்கான நீர் விநியோகம் இன்று நண்பகல் நிலவரப்படி 94 விழுக்காடு சீரமைக்கப்பட்டது என்று ஆயிர் சிலாங்கூர் தெரிவித்துள்ளது.

பெட்டாலிங், கோம்பாக், உலு சிலாங்கூர் மற்றும் கோலா லங்காட் ஆகிய இடங்களில் முறையே 83 மற்றும் 99 விழுக்காடும், கிள்ளான் மற்றும் ஷா ஆலாம் மற்றும் கோலா சிலாங்கூர் ஆகிய இடங்களில் முறையே நீர் விநியோகம் முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளதாக ஆயிர் சிலாங்கூர் நிறுவனத்தின் செய்தித் தொடர்பு தலைவர், எலினா பசேரி தெரிவித்தார்.

“பாதிக்கப்பட்ட ஏனைய பகுதிகளில் நாளை (பிப்ரவரி 14) காலை 6 மணிக்குள் நீர் விநியோகம் முழுமையாக சீரமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here