ஜோகூர் தாருல் தாசிம் கிளப் (JDT) நிர்வாகக் குழுவின் உறுப்பினராகவும், ஜோகூர் மாநில இளைஞர் ஆலோசகராகவும் கைரி ஜமாலுடின் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனை JDT இன் உரிமையாளரும், ஜோகூர் பட்டத்து இளவரசருமான துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு இடுகையின் மூலம் உறுதிப்படுத்தினார்.
“பல்வேறு துறைகளில் அவருக்கு உள்ள விரிவான அனுபவம் இளைஞர்களின் வளர்ச்சிக்கும், ஜோகூர் கால்பந்தின் முன்னேற்றத்திற்கும் கூடுதல் மதிப்பை வழங்கும் என தாம் நம்புவதாகவும் ” அந்த அறிக்கையில் ஜோகூரின் பட்டத்து இளவரசர் குறிப்பிட்டிருந்தார்.