இந்தோனேசிய கடற்படைத் தலைவர் தேசிய கடற்படை தலைமையகத்திற்கு வருகை

இந்தோனேசியாவின் கடற்படைத் தலைவர் அட்மிரல் முஹமட் அலி நேற்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 17) தேசிய கடற்படை தலைமையகத்திற்கு வருகை தந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி இந்தோனேசியக் கடற்படையின் தலைமைப் பொறுப்பை ஏற்ற பிறகு, அவர் அதிகாரப்பூர்வமாக மலேசியாவிற்கு மேற்கொண்ட முதல் அறிமுகப் பயணம் இதுவாகும்.

விஸ்மா பெர்தஹானானில் அவரை மலேசியாவின் தேசிய கடற்படை தலைவர், அட்மிரல் டத்தோ அப்துல் ரஹ்மான் அயோப் வரவேற்றார்.

மேலும் மலேசிய ஆயுதப்படைத் தலைவர் டான்ஸ்ரீ அஃபெண்டி புவாங்கை மரியாதை நிமிர்த்தம் சந்தித்த இந்தோனேசிய கடற்படைத் தலைவர், பின்னர் அட்மிரல் அப்துல் ரஹ்மானுடன் கடற்படை சம்பந்தப்பட்ட சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடினார்.

“இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கான ஒரு தளமாக முஹமட் அலியின் இந்த விஜயம் உள்ளது” என்று தேசிய கடற்படை இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here