சினிமாவில் நிலைக்க அழகு மட்டும் போதாது -நடிகை ராஷிகன்னா

தமிழில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன், சர்தார், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ராஷிகன்னா இப்போது இந்தியில் யோதா படத்தில் நடித்துவருகிறார்.

தெலுங்கிலும் அதிகப்படங்களில் நடித்துள்ளார். ராஷிகன்னா அளித்துள்ள பேட்டியில், ”நடிகைக்கு அழகு முக்கியம்தான். ஆனாலும் அழகை மட்டுமே வைத்துக்கொண்டு சினிமாவில் நிலைத்து இருக்க முடியாது.

நீண்டகாலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து இருப்பதற்கும் பட வாய்ப்புகளை அதிகமாக பெறுவதற்கும் வித்தியாசமான கதை மற்றும் கதாபாத்திரங்களை தேர்வுசெய்து நடிப்பது முக்கியம் என்பதை இப்போது உணர்ந்து இருக்கிறேன்.

இதுவரை என்னை ஜாலியான கதாபாத்திரங்களில் பார்க்க ரசிகர்கள் விரும்பினார்கள். எனக்கும் அதுபோன்ற கதாபாத்திரங்களே வந்தன. ஆனால் நடிப்பு திறமையை வித்தியாசமான கதாபாத்திரங்கள் மூலம்தான் வெளிப்படுத்தமுடியும்.

எனவே அதுமாதிரியான கதை மற்றும் கதாபாத்திரங்களில் நடிக்க முடிவு செய்து இருக்கிறேன். இனிமேல் என்னை வேறுமாதிரி பார்ப்பீர்கள். சினிமாவும், ஓ.டி.டி படங்களும் எனக்கு வித்தியாசமாக தெரியவில்லை” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here