43.17 கிலோ போதைப்பொருளை விநியோகித்த குற்றச்சாட்டில் ஆடவர் கைது

கடந்த வியாழன் அன்று, குளுவாங்கில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில், 21.6 கோடி மலேசிய ரிங்கிட் மதிப்புள்ள 43.17 கிலோ போதைப்பொருள் விநியோகம் செய்த குற்றச்சாட்டில் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

போதைப்பொருளை அதிகாரிகளிடமிருந்து மறைக்கும் வகையில், அவற்றை தேயிலை பைகளில் அடைத்து 27 வயதான சந்தேக நபர் விநியோகம் செய்தார் என்று,
ஜோகூர் காவல்துறையின் துணைத் தலைவர், துணை ஆணையர் எம். குமார் கூறினார்.

இந்தச் சோதனையில், 35.74 கிலோகிராம் எக்ஸ்டசி பவுடர், 2.52 கிலோகிராம் கெட்டமைன், 10,800 எரிமின் 5 மாத்திரைகள் (3.24 கிலோ) மற்றும் 4,869 எக்ஸ்டஸி மாத்திரைகள் (1.67 கிலோ) உட்பட 2.16 மில்லியன் மதிப்புள்ள பல்வேறு வகையான போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

“இந்தச் சோதனையில், 27 வயதான உள்ளூர் ஆடவர் கைது செய்யப்பட்டார் மற்றும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் போதைப் பொருள்களை உள்ளூர் சந்தையில் விநியோகம் செய்து வருவதாகவும், அதற்கு முன்பு குறித்த வாடகை வீட்டை போதைப்பொருள் சேமிப்பு கிடங்காகவும் சந்தேகநபர் பயன்படுத்தியுள்ளார் என்றும் அவர் கூறினார்.

ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 39B இன் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக சந்தேக நபர் தற்போது முதல் பிப்ரவரி 23 வரை ஏழு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here