பனடோல் மாத்திரைகள் கொண்ட பெட்டியைத் திருடிய குற்றச்சாட்டில் நிதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஒரு நபர், தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொண்ட குற்றவாளிக்கு, ஒரு நாள் சிறைத்தண்டனையும், RM1,500 அபராதமும் விதித்து, மலாக்கா மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
குற்றப்பத்திரிகையின் அடிப்படையில், பிப்ரவரி 12, 2023 அன்று, மலாக்கா தெங்கா மாவட்டத்தில் உள்ள தாமான் டூயூங் பிஸ்தாரியில், நண்பகல் 3.51 மணியளவில் வாட்சன் பெர்சனல் கேர் ஸ்டோரில், குற்றம் சாட்டப்பட்டவர் 100 மாத்திரைகள் கொண்ட பனாடோல் ஆக்டிவ்ஃபாஸ்ட் பெட்டியை திருடினார் என்று கூறப்பட்டுள்ளது.
அக்குற்றச்சாட்டை முஹமட் சுல்ஹில்மி ஷோலேஹாட் (29) என்பவர் ஒப்புக்கொண்டதையடுத்து, மாவட்ட நீதிமன்ற நீதிபதி நபிலா நிஜாம் இந்த தண்டனையை விதித்தார்.