நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அமைச்சரவை உறுப்பினர்களுக்கு தீர்ப்பு வரும் வரை எந்த நடவடிக்கையும் இல்லை -பிரதமர்

நீதிமன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அமைச்சரவை உறுப்பினர்களுக்கு எதிரான குற்றம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படுவதற்கு முன்னர், அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

மேலும் “தனது அமைச்சரவை உறுப்பினர்கள் எவரும் சம்பந்தப்பட்ட நீதிமன்ற வழக்குகளில் தான் எந்தவித தலையீடும் செய்யமாட்டேன்” என்றும் உறுதியளித்தார்.

“ஒரு வழக்கின் அடிப்படையில், நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பு வழங்க முன் நடவடிக்கை எடுக்க முடியாது. “உதாரணமாக, இன்று கூட ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது, அதனால் அவர் தனது பதவிகள் அனைத்தையும் ராஜினாமா செய்ய வேண்டுமா? என்று கேட்டால், “நிச்சயமாக  அதற்கு பதில் இல்லை என்பதே, அதுவே எனது நிலைப்பாடும் கூட” என்று அவர் அஹ்மட் ஃபட்லி ஷரியின் (BN-பாசீர் மாஸ்) கேள்விக்கு பிரதமர் இவ்வாறு பதிலளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here