சிப்பாங், ஜனவரி 17 அன்று போர்ட் கிள்ளான் மேற்கு துறைமுகப்பகுதியில் கொள்கலனில் கண்டெடுக்கப்பட்ட வங்கதேச வாலிபர் இன்று சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
கோலாலம்பூரில் உள்ள பங்களாதேஷ் தூதரக அதிகாரிகளுடன் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து இன்று இரவு டாக்காவிற்கு விமானம் மூலம் முகமட் ரதுல் இஸ்லாம் ஃபாஹிம் தனது சொந்த நாட்டுக்கு அழைத்து செல்லப்பட்டதாக உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
பங்களாதேஷில் கப்பல் நின்றபோது, 16 வயது இளைஞன் தற்செயலாக கொள்கலனில் சிக்கியதாக ஒரு செய்தியாளர் கூட்டத்தில் சைபுதீன் கூறினார். கண்டுபிடிக்கப்படும்போது, இளைஞர் மிகவும் பலவீனமாக இருந்தார். மேலும் அவர் மீது எந்த ஆவணமும் இல்லை என்றாலும், மனிதாபிமான அடிப்படையில் அவருக்கு தொடர்ந்து சுகாதாரப் பாதுகாப்பு வழங்கப்பட்டது என்று அவர் கூறினார்.