மலேசியாவிற்கான ஐந்து வெளிநாட்டுத் தூதுவர்களின் நியமனக் கடிதங்கள் பேரரசரிடம் சமர்ப்பிப்பு

மலேசியாவிற்கான ஐந்து வெளிநாட்டு தூதர்களின் நியமனப் பத்திரங்களை மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா பெற்றுக்கொண்டார்.

நேற்று இஸ்தானா நெகாராவில் நடந்த இந்நிகழ்வில் , பேரரசியார் துவாங்கு ஹஜா அசிசா அமினா மைமுனா இஸ்கந்தாரியாவும் கலந்துக் கொண்டார்.

மேலும் துணை வெளியுறவு அமைச்சர் டத்தோ முஹமட் அலாமின் மற்றும் அமைச்சின் துணைத் தலைமைச் செயலாளார் டத்தோ செங் லோன் லாய் ஆகியோரும் இவ்விழாவில் கலந்துக் கொண்டனர்.

சவூதி அரேபியாவில் இருந்து மெசாட் இப்ராஹிம் அப்துல்லா அல் சுலாய்ம் மற்றும் குவைத்திலிருந்து ரஷ்ஹிட் சையிட் முஹ்மட் சைட் ரஷிட் சைட் சாலே ஆகியோர் மாமன்னரைச் சந்தித்து நியமனக் கடிதத்தை சமர்ப்பித்தனர்.

அத்தோடு, பிரான்சிலிருந்து அக்செல் கூராவ், சூடானிலிருந்து ஹசான் அப்டில்சலிம் உமர் மற்றும் கத்தாரிலிருந்து முஹ்மட் அல்-சோரோர் ஆகியோரும் நேற்று பேரரசரை சந்தித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here