சபாவில் மெனு ரஹ்மா திட்டத்தின் கீழ் இதுவரை 63 உணவகங்கள் பதிவு

இந்தாண்டு ஜனவரி 31 ஆம் தேதி மெனு ரஹ்மா திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, சபாவில் மொத்தம் 63 உணவகங்கள் அந்தத் திட்டத்தில் பங்கேற்க பதிவு செய்துள்ளன என்று, மாநில உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகத்தின் இயக்குநர், ஜார்ஜி அப்பாஸ் தெரிவித்தார்.

இந்தத் திட்டம் மாநிலத்தில் உள்ள வர்த்தகர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது என்றும், சில உணவகங்கள் மெனு ரஹ்மாவை அறிமுகப்படுத்திய உடனேயே அதனை செயல்படுத்துகின்றன என்றும் அவர் கூறினார்.

வழங்கப்படும் உணவுகள் விலை, அளவு மற்றும் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளைப் பூர்த்தி செய்வதை உறுதிச்செய்ய, இந்தத் திட்டத்தில் பதிவுசெய்துள்ள உணவகங்களை அவர்கள் எப்போதும் கண்காணிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

“இந்த திட்டத்திற்கு நிதி அல்லது மானியம் வடிவில் எந்த உதவியும் வழங்கப்படவில்லை,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here