நாசிக் கண்டார் உணவக ஊழியர் ஒருவருடன் தகராறு செய்யும் காணொளி குறித்து போலீஸ் விசாரணை ஆரம்பம்

பாயான் லெப்பாஸ், பிப்ரவரி 3 :

இங்குள்ள பத்து மவுங்கில் (Batu Maung) உள்ள ஒரு நாசிக் கண்டார் உணவகத்தில், வாடிக்கையாளர்களுக்கும் உணவக ஊழியர்களுக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தை உள்ளடக்கிய ஒரு நிமிட 31 வினாடி கொண்ட காணொளிப் பதிவு சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, அது தொடர்பில் போலீசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

காணொளிப் பதிவின் மூலம், ஆண் வாடிக்கையாளர், சம்பந்தப்பட்ட உணவக ஊழியரிடம் அசல் உணவுக் கட்டணத்தை விட குறைவான பணத்தை கொடுத்ததாகவும் அதன் பின்னரே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அறியமுடிகிறது.

தென்மேற்கு மாவட்டக் காவல்துறைத் தலைமைக் கண்காணிப்பாளர் கமாருல் ரிசால் ஜெனால் இதுபற்றிக் கூறுகையில், இந்த தகராறு தொடர்பாக உணவக ஊழியர் போலீசில் புகார் அளித்ததை அடுத்து, சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை போலீசார் திறந்துள்ளனர் என்றார்.

“இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை மாலை 4 மணியளவில் பத்து மாங்கில் உள்ள நாசிக் கண்டார் உணவகத்தில் நடந்ததாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

“இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் குற்றவியல் சட்டம் பிரிவு 506 மற்றும் தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் பிரிவு 233 இன் படி வழக்கு விசாரிக்கப்படுகிறது,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here