வரவு செலவுத் திட்டம் 2023: சுற்றுலாத் துறையை மேம்படுத்த RM250 மில்லியன் ஒதுக்கீடு

2023-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கீழ், சுற்றுலாத் துறையை மேம்படுத்த மொத்தம் 250 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

2025 ஆம் ஆண்டினை மலேசியா சுற்றுலா ஆண்டாக கொண்டாடவிருப்பதை முன்னிட்டு, 23.5 மில்லியன் அனைத்துலக சுற்றுலாப் பயணிகளின் வருகை தருவார்கள் எனவும், அதன் மூலம் நாட்டிற்கு RM 76.8 பில்லியன் வரை வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அன்வார் கூறினார்.

இதற்காக சுற்றுலா தலங்களில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அரசாங்கம் பல உள்கட்டமைப்பு திட்டங்களையும் செயல்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here