நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தொடர் மழைக்கு வாய்ப்பு -மலேசிய வானிலை ஆய்வு மையம்

மலேசியாவின் பெரும்பாலான பகுதிகளிலும், சபா மற்றும் சரவாக் பகுதிகளிலும் தொடர் மழைக்கு வாய்ப்பிருப்பதாக, மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பேராக் (மஞ்சூங், கிந்தா, பேராக் தெங்கா, கம்பார், பாகான் டத்தோ, ஹிலீர் பேராக், பத்தாங் பாடாங் மற்றும் முஅல்லிம்), ஆகிய இடங்களும், திரெங்கானு, பகாங், சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான், மலாக்கா மற்றும் ஜோகூர் ஆகிய இடங்களில் எதிர்வரும் செவ்வாய் (பிப். 28) முதல் புதன்கிழமை (மார்ச் 1) வரையான இரு நாட்களுக்கு, தொடர் மழை பெய்யும் என்று, இன்று சனிக்கிழமை (பிப். 25) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சரவாக்கில் ஸ்ரீ அமான், பேத்தோங், சரிகேய், சிபு மற்றும் பிந்துலு (டாடாவ் மற்றும் பிந்துலு) ஆகிய இடங்களில் நாளை முதல் திங்கள் (பிப். 27) வரை தொடர் மழை எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கூச்சிங், செரியான், சமரஹான் மற்றும் முக்காஹ் ஆகிய இடங்களிழும் தொடர்ந்து கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுபோல, சபாவில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 26) முதல் திங்கள் (பிப். 27) வரை சண்டாக்கான் (தெலுபிட், கினாபாடாங்கான், பெலூரான் மற்றும் சண்டாக்கான்) மற்றும் கூடாத் உள்ளிட்ட பகுதிகளிழும் தொடர் மழை பெய்யும் எனஎதிர்பார்க்கப்படுகிறது,” என்று அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here