டீசல் மானியக் கசிவைச் சமாளிக்க பணிக்குழு

ஜோகூர் பாரு: உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் (KPDN) டீசல் மானியக் கசிவு பிரச்சினையைச் சமாளிக்க சிறப்புப் பணிக்குழுவை அமைத்துள்ளது. மேலும் கசிவுகளை தடுக்க உடனடியாக செயல்படுமாறு KPDN பொதுச்செயலாளர் அஸ்மான் முகமட் யூசோப் தலைமையிலான பணிக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் சலாவுதீன் அயூப் கூறினார்.

கடந்த ஒரு மாதமாக, குறிப்பாக சபா மற்றும் சரவாக் உள்ளிட்ட கிராமப்புறங்களில், அமலாக்க நடவடிக்கைகள் மற்றும் ரோந்துப்பணிகளை அமைச்சகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது என்றார்.

இன்று டேவான் ராயா தாமான் புக்கிட் இண்டாவில் நடந்த பள்ளிக்கு திரும்புவதற்கான உதவி விழாவிற்குப் பிறகு, கசிவுகள் ஏற்படக்கூடிய மீனவர்களின் ஜெட்டிகளிலும் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று அவர் கூறினார்.

அமைச்சகம் தனது 2,100 அமலாக்க அதிகாரிகளையும் பணியாளர்களையும் திரட்டி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று Pulai MP கூறினார்.

டீசல் மானியங்களைப் பெறுவதற்கான நடைமுறையை KPDN கடுமையாக்குமா என்று கேட்டதற்கு, எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் தனது அமைச்சகம் கசிவு பிரச்சினை குறித்து ஆழமான விசாரணையை மேற்கொள்ளும் என்று சலாவுதீன் கூறினார்.

மீனவர்களுக்கு டீசல் உதவித் திட்டத்தை வழங்கும் வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகத்துடன் நாங்கள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.

நேற்று, பிரதமர் அன்வார் இப்ராஹிம் 2023 பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது, ​​டீசல் மானியங்களை அமல்படுத்துவதில் கசிவுகள் இருப்பதாகக் கூறினார். கடந்த ஆண்டு 10 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான டீசல் முறைகேடாக பயன்படுத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here