சமூக வலைத்தளங்களில் வரும் போலிச் செய்திகள் மற்றும் வெறுப்பூட்டும் பேச்சுகளைக் கையாள்வதில், தகவல் தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சகம் சமூக வலைத்தள சேவை வழங்குநர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றும் என்று தியோ நீ சிங் தெரிவித்தார்.
தற்போது சமூக வலைத்தளங்களை அனைத்துவிதமான தரப்பினரும் இலகுவாக அணுக முடிவதாலும், தனிப்பட்ட விரோதங்களுக்காக பழிவாங்கும் இடமாக அவற்றை பயன்படுத்த நினைப்பதாலும், சமீபகாலமாக தவறான உள்ளடக்கங்கள் மற்றும் வெறுப்பூட்டும் பேச்சுக்கள் தொடர்பான போக்கு அதிகரித்து வருவதாகவும், அத்தகைய இடுகைகளை அகற்றுவதன் மூலம் குறித்த சேவை வழங்குநர்கள் அவர்களுக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள் என்றும் தகவல் தொடர்பு மற்றும் இலக்கவியல் துணை அமைச்சருமான அவர் கூறினார்.
“இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை, 35 வழக்குகள் விசாரிக்கப்பட்டுள்ளன,” என்று அவர் கூறினார்.
“இந்தப் போக்கின் படி பார்த்தால், இந்த ஆண்டு இது 350 வழக்குகளாக அதிகரிக்கக்கூடும்,” என்று அவர் கூறினார்.









