இளம் விளையாட்டாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் செயல்பட்டு வரும் பேராக் பிளேக் பேந்தர் காற்பந்து கிளப்பிற்கு தொழிலதிபர் டத்தோ கோபால் , டத்தின் கிஷாலினி ஆகியோர் புதிய ஜெர்சிகளும் பயிற்சி டி-சட்டைகளும் வழங்கி ஆதரவு வழங்கினர். கடந்த 10 ஆண்டுகளாக இக்கிளப் தொடர்ந்து செயல்பட்டு வருவதுடன், குறிப்பாக பி40 குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களை மையமாகக் கொண்டு காற்பந்து பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது என பேராக் பிளேக் பேந்தர் காற்பந்து கிளப் தலைவர் சேகரன் கூறினார்.
மாணவர்களிடம் மாதம் 30 ரிங்கிட் என்ற குறைந்த கட்டணத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சொன்னார். மேலும், விளையாட்டாளர்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்கி உதவி செய்த டத்தோ கோபால் – டத்தின் கிஷாலினி தம்பதியருக்கு கிளப்பின் சார்பில் நன்றியும் பாராட்டும் சேகரன் தெரிவித்தார் வரும் மாதம் சிலாங்கூரில் நடைபெறவுள்ள மலேசிய இந்தியர் காற்பந்து சங்கத்தின் (MIFA) தேசிய மட்டப் போட்டியிலும் பேராக் பிளேக் பேந்தர் அணியினர் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் டத்தோ கோபால்- டத்தின் கிஷாலினி பிரதிநியாக ஜயா நவிநாதன் – சாய் திலகம் அம்மையார் தம்பதியினர் கலந்துக்கொண்ட வேளையில் மாணவர்களின் பெற்றோர்கள் திரளானோர் கலந்துக்கொண்டனர். காற்பந்து பயிற்சியில் இணைவதற்கான தகவல்களுக்கு பெற்றோர் 014-3022721 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
(எஸ்.லிங்கேஸ்வரன்)










