வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 16-வது கிலோமீட்டரில் தெற்கு நோக்கிச் செல்லும் ஸ்கூடாய் சுங்கச்சாவடிக்கு அருகில் இன்று, 24 பயணிகளுடன் சென்ற விரைவுப் பேருந்து ஒன்றை டேங்கர் லோரி மோதியதில், மூவர் லேசான காயமடைந்தனர்.
இன்று அதிகாலை 4.20 மணியளவில், 46 வயதுடைய நபர் ஒருவர் ஓட்டிச் சென்ற டேங்கர் லோரி, ஜோகூர் பாருவுக்குச் செல்லும் வழியில், நடுப் பாதையில் சென்ற விரைவுப் பேருந்தின் பின்புறத்தில் மோதியதில் விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுவதாக, கூலாய் மாவட்ட காவல்துறை தலைமைக் கண்காணிப்பாளர் தோக் பெங் இயோவ் தெரிவித்தார்.
இதன் விளைவாக, விரைவு பேருந்து பின்னர் சறுக்கி எதிர் திசையில் கவிழ்ந்தது, இதனால் மூன்று பயணிகள் லேசான காயமடைந்தனர்” என்றும், டேங்கர் லோரி ஓட்டுநருக்கு காயம் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.
சாலை போக்குவரத்து சட்டம் 1957 பிரிவு 43 (1)ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது என்று அவர் மேலும் கூறினார்.









